🔗

ஹாகிம்: 4228

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قَالَ: يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي، فَقَالَ اللَّهُ: يَا آدَمُ، وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ؟ قَالَ: يَا رَبِّ، لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَىَ قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فَقَالَ اللَّهُ: صَدَقْتَ يَا آدَمُ، إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ


4228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்கள் பாவம் புரிந்து, பிறகு (பூமியில் இறக்கப்பட்ட போது) “ எனது இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” எனக் கூறினார். அதற்கு அல்லாஹ், “முஹம்மது யார் என எப்படி உனக்குத் தெரியும்?. அவரை இன்னும் நான் படைக்கவில்லையே!” என்று கூறினான்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “நீ என்னை உனது கையால் படைத்து, எனக்குள் உயிரை ஊதிய போது எனது தலையை உயர்த்தி உனது அர்ஷின் தூண்களைப் பார்த்தேன். அதில், லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. எனவே உன்னுடைய பெயரோடு யாரை நீ சேர்த்திருந்தாயோ அவர் மற்றவர்களை விட உனக்கு மிகவும் பிரியமானவர் என நான் அறிந்து கொண்டேன்” எனக் கூறினார்.

அதற்கு அல்லாஹ், “ஆதமே! நீ சரியாகத் தான் கூறினாய். படைப்பினங்களில் அவரே எனக்கு மிகவும் பிரியமானவர். எனவே அவரின் பொருட்டால் என்னிடம் பிரார்த்தனை செய்வீராக! உனக்கு மன்னிப்பு வழங்குகிறேன். முஹம்மத் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது அறிவிப்பாளர்தொடர் சரியாக உள்ள செய்தியாகும்.

மேலும் நான் இந்த நூலில் கூறும் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவரின் செய்திகளில் இது முதல் செய்தியாகும்.