قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَدْ رَأَيْتُكَ يَوْمَ أُحُدٍ فَصَفَحْتُ عَنْكَ» ، فَقَالَ أَبُو بَكْرٍ: «لَكِنِّي لَوْ رَأَيْتُكَ لَمْ أَصْفَحْ عَنْكَ»
6005. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உஹுத் போரின்போது நான் உங்களைக் கண்டேன். (ஆனால், எதிர்த்துத் தாக்காமல்) உங்களை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆனால், நான் உன்னைக் கண்டிருந்தால் உன்னை விட்டு முகத்தை திருப்பியிருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.