🔗

ஹாகிம்: 688

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

الْفَجْرُ فَجْرَانِ: فَأَمَّا الْفَجْرُ الَّذِي يَكُونُ كَذَنَبِ السَّرْحَانِ فَلَا تَحِلُّ الصَّلَاةُ فِيهِ وَلَا يَحْرُمُ الطَّعَامُ، وَأَمَّا الَّذِي يَذْهَبُ مُسْتَطِيلًا فِي الْأُفُقِ فَإِنَّهُ يُحِلُّ الصَّلَاةَ، وَيُحَرِّمُ الطَّعَامَ


688.

பொழுது விடிவது இரண்டு வகைப்படும். முதலாவது, “வால்நட்சத்திரத்தின் வால் போன்ற” பொழுது விடிதல். இந்த நேரத்தில் தொழுகை தொழுவது தவறானது; ஆனால் உணவு உண்பதற்குத் தடை இல்லை. இரண்டாவது, அடிவானத்தில் நீளமாகப் பரவும் பொழுது விடிதல். இந்த நேரத்தில் தொழுகை தொழுவது சரியானது; ஆனால் உணவு உண்பதற்குத் தடை உள்ளது.