🔗

ஹாகிம்: 7090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ يَهُودِيَّةً أَهْدَتْ شَاةً إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِيطًا فَلَمَّا بَسَطَ الْقَوْمُ أَيْدِيَهُمْ قَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُفُّوا أَيْدِيَكُمْ فَإِنَّ عُضْوًا مِنْ أَعْضَائِهَا يُخْبِرُنِي أَنَّهَا مَسْمُومَةٌ» قَالَ: فَأَرْسَلَ إِلَى صَاحِبَتِهَا فَقَالَ: «أَسَمَمْتِ طَعَامَكِ هَذَا؟» قَالَتْ: نَعَمْ أَحْبَبْتُ إِنْ كُنْتَ كَاذِبًا أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ وَإِنْ كُنْتَ صَادِقًا عَلِمْتُ أَنَّ اللَّهَ سَيُطْلِعُكَ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا اسْمَ اللَّهِ وَكُلُوا» فَأَكَلْنَا فَلَمْ يَضُرَّ أَحَدًا مِنَّا شَيْءٌ


7090. ஒரு யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்குத் தோல் உரிக்கப்பட்டு, சமைக்கப்பட்ட ஆடு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாள். மக்கள் அதிலிருந்து சாப்பிட தங்கள் கைகளை நீட்டியபோது, நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் கைகளை எடுத்துவிடுங்கள்! ஏனெனில், இந்த ஆட்டின் ஓர் உறுப்பு, இதில் விஷம் தோய்ந்துள்ளது என்று எனக்கு அறிவிக்கிறது’ என்று கூறினார்கள்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டின் உரிமையாளரிடம் ஆளனுப்பி, ‘இந்த உணவில் நீ விஷம் கலந்தாயா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவள், ‘ஆம். நீங்கள் பொய்யராக இருந்தால், மக்களை உங்களை விட்டும் நான் நிம்மதியாக்க விரும்பினேன். நீங்கள் உண்மையாளராக இருந்தால், அல்லாஹ் உங்களுக்கு அதைப் பற்றி அறிவிப்பான் என்று எனக்குத் தெரியும்’ என்று கூறினாள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சாப்பிட்டோம். அதிலிருந்து எங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)