«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ وَلَا يُضَحَّى بِمُقَابَلَةٍ وَلَا مُدَابَرَةٍ وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ»
قَالَ أَبُو إِسْحَاقَ: ” الْمُقَابَلَةُ: مَا قُطِعَ طَرَفُ أُذُنِهَا، وَالْمُدَابَرَةُ: مَا قُطِعَ مِنْ جَانِبِ الْأُذُنِ، وَالشَّرْقَاءُ: الْمَشْقُوقَةُ، وَالْخَرْقَاءُ: الْمَثْقُوبَةُ
7532. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்பானி பிராணிகளின் கண்கள் மற்றும் காதுகளை நன்கு கவனித்து (குறைபாடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும் முகாபலா-காது நுனியில் முன்பகுதி வெட்டப்பட்டவை, முதாபரா-காது நுனியில் பின்பகுதி வெட்டப்பட்டவை, ஷர்கா-காது நெடுக்காகக் கிழிக்கப்பட்டவை, கர்கா-காது துளைக்கப்பட்டவை ஆகிய குறைகள் உள்ளவற்றை குர்பானி கொடுக்கக் கூடாது என்றும் தடுத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், “முகாபலா” என்பது காது நுனியில் வெட்டப்பட்டது. “முதாபரா” என்பது காதின் பக்கவாட்டில் வெட்டப்பட்டது. “ஷர்கா” என்பது பிளவுபட்டது. “கர்கா” என்பது துளைக்கப்பட்டது என்று (விளக்கம்) கூறினார்.