«مَنْ أَدْرَكَ مِنْكُمْ عِيسَى ابْنَ مَرْيَمَ فَلْيُقْرِئْهُ مِنِّي السَّلَامَ صَلَّى اللَّهُ عَلَيْهِمَا وَسَلَّمَ»
8635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களை சந்திக்கிறாரோ அவர், என் புறத்திலிருந்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)