«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا»
பாடம்:
நோன்புப் பெருநாளில், (பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்) இரட்டைப்படை எண்ணிக்கையிலன்றி, ஒற்றைப்படை எண்ணிக்கையில் சில பேரீத்தம்பழங்களை உண்பது விரும்பத்தக்கது.
2814. உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு பேரீச்சம்பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.