🔗

இப்னு ஹிப்பான்: 2985

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ»


பாடம்:

ஒரு முஸ்லிமுக்கு உலகில் (வயது மூப்பினால்) நரைமுடி ஏற்படும்போது, மாண்பும் உயர்வும் மிக்க அல்லாஹ், அவருக்கு நன்மைகளை எழுதி; தீமைகளை அழித்து; பதவிகளை உயர்த்துகிறான் என்று வந்துள்ள செய்தி.

2985. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரை முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் அது (முஸ்லிமுக்கு) மறுமையில் ஒளியாகும். இஸ்லாத்தில் இருக்கும் போது ஒருவருக்கு ஒரு முடி நரைத்து விட்டாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; ஒரு பாவத்தை மன்னிக்கிறான்; ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)