🔗

இப்னு ஹிப்பான்: 4308

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهَا عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ»


பாடம்:

இறைநம்பிக்கையுள்ள அடிமையை உரிமை விடும்போதே (இதற்கு முன்னுள்ள ஹதீஸ்களில் கூறப்பட்ட) நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றிய விளக்கம்.

4308. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையுள்ள ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)