🔗

இப்னு ஹிப்பான்: 5056

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، قَالَ لِابْنِ عُمَرَ: اذْهَبْ فَكُنْ قَاضِيًا، قَالَ أَوَ تُعْفِينِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟، قَالَ: اذْهَبْ، فَاقْضِ بَيْنَ النَّاسِ، قَالَ تُعْفِيَنِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟، قَالَ: عَزَمْتُ عَلَيْكَ إِلَّا ذَهَبْتَ فَقَضَيْتَ، قَالَ: لَا تَعْجَلْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَاذَ بِاللَّهِ فَقَدْ عَاذَ مَعَاذًا»، قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنِّي أَعُوذُ بِاللَّهِ، أَنْ أَكُونَ قَاضِيًا، قَالَ: وَمَا يَمْنَعُكَ، وَقَدْ كَانَ أَبُوكَ يَقْضِي؟، قَالَ: لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا، فَقَضَى بِالْجَهْلِ، كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا، فَقَضَى بِالْجَوْرِ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا عَالِمًا يَقْضِي بِحَقٍّ أَوْ بِعَدْلٍ، سَأَلَ التَّفَلُّتَ كَفَافًا»، فَمَا أَرْجُو مِنْهُ بَعْدَ ذَا


5056. அப்துல்லாஹ் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.

மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பினேன் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் அவர்களே! அவசரப்படாதீர்கள், “யார் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டாரோ அவர் சிறந்த புகழிடத்தை பெற்றுக்கொண்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூற நீங்கள் கேட்டுள்ளீர்கள் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ஆம், கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் என்னை நீதிபதி பதவிக்கு நியமிப்பதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள், உங்கள் தந்தை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இருந்திருக்கும் போது உங்களை தடுத்தது எது? என்று கேட்டார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். அநியாயமாக தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதமாக தீர்ப்பளித்தால் அவர் தப்பித்துவிடுவார். (அவருக்கு லாபமும் இல்லை, நட்டமும் இல்லை) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றுள்ளேன். இதற்கு பின்பும் இந்த நீதிபதி பொறுப்பிற்கு நான் ஆசைப்படுவேனா? என்று உஸ்மான் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்…