«مَا مَلَأَ آدَمَيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُكَ يَا ابْنَ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَكَ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ نَفَسٌ»
5236. மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். (அதைவிட கூடுதல் உணவு) அவசியம் என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)