🔗

இப்னு ஹிப்பான்: 5528

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

«مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ أَوْ خَطَايَاهُ – شَكَّ مِسْعَرٌ – وَإِنْ كَانَ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


பாடம்:

ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது கூறுவதன் மூலம் அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிக்கும் இறைத் துதிச்சொற்கள்.

5528. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலா இலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்”

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணையாக யாருமில்லை. ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றிக் தீமைகளிலிருந்து விலகவோ, நன்மைகள் செய்ய ஆற்றல் பெறவோ முடியாது. அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப்பரியவன்)

என்று கூறினால், அவரது பாவங்களை – அல்லது குற்றங்களை அவை கடலின் நுரை அளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


மிஸ்அர் பின் கிதாம் அவர்கள், “அவரது பாவங்களை (துனூப்)  – அல்லது குற்றங்களை-கதாயா” என்று இரு வார்த்தைகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம் என அறிவித்தார்.