🔗

இப்னு ஹிப்பான்: 72

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِنَّ اللَّهَ يُبْغِضُ كُلَّ جَعْظَرِيٍّ جَوَّاظٍ سَخَّابٍ بِالْأَسْوَاقِ، جِيفَةٍ بِاللَّيْلِ، حِمَارٍ بِالنَّهَارِ، عَالِمٍ بِأَمْرِ الدُّنْيَا، جَاهِلٍ بِأَمْرِ الْآخِرَةِ»


பாடம்:

உலக விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கு (மட்டும்) கூடுதல் கவனம் செலுத்திவிட்டு, மறுமை விசங்களை அறியாமல் அதைவிட்டு தூரமாக இருப்பதைக் குறித்து வந்துள்ள கண்டனம்.

72. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரக்கமற்ற; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்த; கடைவீதிகளில் அதிகம் கத்துகின்ற; இரவில் பிணத்தைப் போன்றும்; பகலில் கழுதையைப் போன்றும் இருக்கின்ற; உலக விசயங்களை அறிந்து, மறுமை விசயங்களை அறியாத ஒவ்வொருவரையும் அல்லாஹ் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)