قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟، قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»
பாடம்:
…
731. அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.
இப்னு ஹிப்பான் (அபூஹாதிம்) கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஃகூப் என்பவர் யஃகூப் பின் அம்ர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உமைய்யா அள்ளம்ரிய்யு என்பவர் ஆவார். இவர் ஹிஜாஸ் பகுதியை சேர்ந்தவரும், பிரபலமானவரும் நம்பகமானவரும் ஆவார்.