🔗

ibn-khuzaymah-111: 111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا مِنْهُ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ؟ فَقَالَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الْحَلَالُ مَيْتَتُهُ»

 


111. நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து, (அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ) நாங்கள் தூரமான கடல் பயணம் செல்லும் போது ஒன்றிரண்டு தோல்பையில் தான் தண்ணீர் எடுத்து செல்கிறோம்.‎ நாங்கள் அந்த தண்ணீரை உலூச் செய்ய பயன் படுத்தினால் தாகத்தால் கஷ்டப் ‎படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா? என்று கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎..