🔗

ibn-khuzaymah-1152: 1152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ قَالَ بَعْدَمَا يُكَبِّرُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قِيَامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، وَإِلَيْكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ»


பாடம்:

நபி (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கட்டிய பிறகுதான் இந்த (திக்ர் தஹ்மீத்) புகழ் வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; இந்த பிரார்த்தனையை ஓதினார்கள்; தக்பீர் கட்டுவதற்கு முன்னர் அல்ல என்பதற்குரிய ஆதாரம்.

1152. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக நின்றால், தக்பீர் கட்டிய பிறகு (கீழ்க்கண்டவாறு) கூறுவார்கள்:

அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த கியாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, வ மன் ஃபீஹின். அன்தல் ஹக்கு. வ கவ்லுக ஹக்குன். வ வஃதுக ஹக்குன். வ லிக்காஉக ஹக்குன். வல்ஜன்னது ஹக்குன். வன்நாரு ஹக்குன். வஸ்ஸாஅது ஹக்குன்.

அல்லாஹும்ம லக அஸ்லம்து. வ பிக ஆமன்து. வ அலைக்க தவக்கல்து. வ இலைக்க அனப்து. வ இலைக்க ஹாகம்து. வ இலைக்க காஸம்து. வ இலைகல் மஸீர். அல்லாஹும் மஃக்ஃபிர்லீ மா கத்தம்து வமா அஃக்கர்து. வமா அஸ்ரர்து, வமா அஃலன்து. அன்த இலாஹீ, லா இலாஹ இல்லா அன்த.

(பொருள்: இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசம். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியை நிர்வகிப்பவன். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தின் இறைவன். நீயே உண்மையானவன்! உனது சொல்லும் உண்மை! உனது வாக்கும் உண்மை! உன்னைக் கண்டடைவதும் உண்மை! சொர்க்கம் உண்மை! நரகம் உண்மை! மறுமைநாள் உண்மை!

இறைவா! உனக்கே நான் கட்டுப்பட்டேன். உன்னையே நான் நம்பினேன். உன்னையே நான் சார்ந்தேன். உன்னிடமே நான் திரும்பினேன். உன்னிடமே நான் தீர்ப்புக் கோரினேன். உனக்காகவே நான் வாதிட்டேன். உன்னிடமே நான் திரும்புவேன்.

இறைவா! நான் முந்திச் செய்த பாவங்களையும், பிந்திச் செய்த பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் எனக்கு மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)