قَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ، فَخَطَبَ، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَدَعَا، وَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ وَصَلَّى بِهِمْ»
1407. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டோம். அவர்கள் உரையாற்றினார்கள். கிப்லாவை முன்னோக்கி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். தனது மேலாடையை மாற்றிப்போட்டு மக்களுக்கு தொழ வைத்தார்கள்.