🔗

ibn-khuzaymah-1429: 1429

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَخْرُجُ يَوْمُ الْفِطْرَ حَتَّى يَأْكُلُ تَمَرَاتٍ، وَيَأْكُلُهُنَّ وِتْرًا»


பாடம்:

நோன்புப் பெருநாளில், (பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்) ஒற்றைப்படை எண்ணிக்கையில் சில பேரீத்தம்பழங்களை உண்பது விரும்பத்தக்கது.

1429. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். மேலும் அவைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்)