الصَّفْقَةُ بِالصَّفْقَتَيْنِ رَبًّا، وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ
176. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணைமுறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வது வட்டியாகும் என்று (எனது தந்தை) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உளூ எனும் அங்கத்தூய்மையை நாங்கள் முழுமையாகச் செய்யவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் (ரஹ்)