🔗

ibn-khuzaymah-356: 356

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

«الْفَجْرُ فَجْرَانِ فَجَرٌ يَحْرُمُ فِيهِ الطَّعَامُ وَيَحِلُّ فِيهِ الصَّلَاةُ، وَفَجَرٌ يَحْرُمُ فِيهِ الصَّلَاةُ وَيَحِلُّ فِيهِ الطَّعَامُ»


பாடம்:

ஃபஜ்ர் நேரம் இரு வகை. ஒன்று, இரவில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். மற்றொன்று பகலின் ஆரம்பத்தில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். இந்த (இரண்டாவது) நேரத்தில்தான் ஸுப்ஹ் தொழுவது கூடும் என்பது பற்றிய விளக்கம்.

356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். ஒன்று, உணவு (உண்பது) தடைசெய்யப்பட்டு, தொழுவது அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

மற்றொன்று, தொழுவது தடை செய்யப்பட்டு, உணவு (உண்பது) அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


இப்னு குஸைமா இமாம் கூறுகிறார்:

கடமையான தொழுகையை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னால் தொழக்கூடாது என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக உள்ளது.
உணவு உண்பது கூடாது என்றால் அது நோன்பாளி (ஸஹர் உணவு) உண்பதைக் குறிக்கிறது. தொழுவது கூடும் என்றால் அது ஸுப்ஹ் தொழுகையைக் குறிக்கிறது.

தொழுவது தடை செய்யப்பட்ட ஃபஜ்ர் என்றால் முதல் ஃபஜ்ர் தோன்றியவுடன் அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால் முதல் ஃபஜ்ர் என்பது இரவாகும். அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது. இந்த நேரத்தில் உபரியான தொழுகைகளைத் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
உணவு உண்ணுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால் அது நோன்பாளி ஸஹர் உண்பதைக் குறிக்கிறது.

இந்தச் செய்தியை அபூஅஹ்மத் ஸுபைரீ அவர்களைத் தவிர, உலகில் வேறுயாரும் நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.