🔗

இப்னுமாஜா: 1161

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

سَأَلْنَا عَلِيًّا، عَنْ تَطَوُّعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ فَقَالَ: إِنَّكُمْ لَا تُطِيقُونَهُ، فَقُلْنَا: أَخْبِرْنَا بِهِ نَأْخُذْ مِنْهُ مَا اسْتَطَعْنَا، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا صَلَّى الْفَجْرَ يُمْهِلُ، حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – بِمِقْدَارِهَا مِنْ صَلَاةِ الْعَصْرِ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَغْرِبِ – قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ يُمْهِلُ حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا، – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – مِقْدَارَهَا مِنْ صَلَاةِ الظُّهْرِ مِنْ هَاهُنَا قَامَ فَصَلَّى أَرْبَعًا، وَأَرْبَعًا قَبْلَ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَأَرْبَعًا قَبْلَ الْعَصْرِ، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُؤْمِنِينَ»
قَالَ عَلِيٌّ: فَتِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً، تَطَوُّعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا،
قَالَ وَكِيعٌ: زَادَ فِيهِ أَبِي: فَقَالَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ يَا أَبَا إِسْحَاقَ مَا أُحِبُّ أَنَّ لِي بِحَدِيثِكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ هَذَا ذَهَبًا


பாடம்:

பகல் நேர உபரியான தொழுகைகள் குறித்து வந்துள்ளவை.

1161. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அதை நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள். நாங்கள், “அதிலிருந்து எங்களால் முடிந்ததை எடுத்துக்கொள்வதற்காகவாவது எங்களுக்கு அதை அறிவியுங்கள்” என்றோம்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுவிட்டு சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உதித்து) வரும்போது – (அதாவது மேற்கு திசையில் அஸருடைய நேரத்தின் அளவுக்கு வரும்போது) – எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.

பிறகு, சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உயர்ந்து) வரும்போது – (அதாவது மேற்குத் திசையில் ளுஹருடைய நேரத்தின் அளவுக்கு உயரும்போது) – எழுந்து நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள்.

மேலும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் ளுஹர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகளும், அதற்குப் பின்னால் இரண்டு ரக்அத்துகளும் தொழுவார்கள்.

அஸர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை இரண்டாக பிரிப்பார்கள்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இவையே நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியாக தொழும் பதினாறு ரக்அத் தொழுகைகளாகும். இதைத் தொடர்ந்து நிறைவேற்றுபவர்கள் மிகக் குறைவானவர்களே!


வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள், தனது தந்தை ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் (கீழ்க்கண்டவாறு) கூடுதலான தகவலை கூறியதாக அறிவிக்கிறார்:

அபூஇஸ்ஹாக் அவர்கள் இதை ஹபீப் பின் அபூஸாபித் அவர்களுக்கு அறிவித்தபோது அவர், “அபூஇஸ்ஹாக் அவர்களே! உங்களது இந்த ஹதீஸுக்கு பதிலாக உங்களது இந்த பள்ளிவாசல் நிரம்பத் தங்கம் இருந்தாலும் அதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்.