«صَلَاةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِ مِائَةِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الْأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلَاةٍ»
பாடம்:
பெரிய பள்ளிவாசலில் தொழுவதின் சிறப்பு.
1413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனது வீட்டில் ஒரு தொழுகை தொழுவது, ஒரு தொழுகைக்கு நிகராகும். தனது கூட்டத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, 25 தொழுகைக்கு நிகராகும். மக்கள் ஒன்றுத்திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது 500 தொழுகைக்கு நிகராகும்.
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். எனது (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது ஒரு இலட்சம் தொழுகைக்கு நிகராகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)