🔗

இப்னுமாஜா: 1527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ، فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عَنْهَا بَعْدَ أَيَّامٍ، فَقِيلَ لَهُ: إِنَّهَا مَاتَتْ، قَالَ: «فَهَلَّا آذَنْتُمُونِي، فَأَتَى قَبْرَهَا، فَصَلَّى عَلَيْهَا»


1527. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” ஒருவரைக் காணாததால் சில நாட்களுக்கு பின் அவரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என அவர்களுக்கு கூறப்பட்டது.

“நீங்கள் இதை எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறைக்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)