إِنَّمَا كَانَتْ يَهُودِيَّةٌ مَاتَتْ، فَسَمِعَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكُونَ عَلَيْهَا، قَالَ: «فَإِنَّ أَهْلَهَا يَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا تُعَذَّبُ فِي قَبْرِهَا»
1595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறந்தவருக்காக அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக,) ஒரு யூதப்பெண் இறந்தபோது (அவரது குடும்பத்தினர்) அவருக்காக அழுவதை செவியேற்ற நபி (ஸல்) அவர்கள், “இவரின் குடும்பத்தினர் அவருக்காக அழுகின்றனர்; ஆனால் அவரோ கப்ரில் வேதனைசெய்யப்படுகிறார்” என்றுதான் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உபைதுல்லாஹ் (ரஹ்)