أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ؟ فَقَالَ: ” إِنَّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ يَغْفِرُ اللَّهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ، إِلَّا مُتَهَاجِرَيْنِ، يَقُولُ: دَعْهُمَا حَتَّى يَصْطَلِحَا
1740. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். எனவே அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்புவைக்கிறீர்களே! (ஏன்) என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான். (தமக்கிடையே சண்டையிட்டு “பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர! “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)