🔗

இப்னுமாஜா: 1846

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي، وَتَزَوَّجُوا، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ»


1846. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருமணம் எனது வழிமுறையாகும். எனது வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.

அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன்.

(திருமணம் செய்வதற்கு) வசதியுள்ளவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; யார் அதற்கான வசதி வாய்ப்புகளை பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில் நோன்பு அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)