«أَعْتَقَتْنِي أُمُّ سَلَمَةَ فَاشْتَرَطَتْ عَلَيَّ أَنْ أَخْدُمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَاشَ»
பாடம்:
ஒருவர் தனது அடிமையை உரிமை விடும்போது, பணிவிடை செய்ய வேண்டும் என நிபந்தனையிடுவது.
2526. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஸலமா (ரலி) அவர்கள், எனக்கு (அடிமைத்தனத்திலிருந்து) விடுதலை அளித்தார்கள்.
மேலும், “நான் வாழும் வரை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்” என்று என்னிடம் நிபந்தனையிட்டார்கள்.