🔗

இப்னுமாஜா: 284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الْوُضُوءِ»

قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ: حَدَّثَنَا أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ


284. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய சமுதாயத்தாரில் நீங்கள் பார்த்திராத மக்களை (மறுமை நாளில்) எப்படி அறிந்துகொள்வீர்கள்?” என (நபி-ஸல்-அவர்களிடம்) வினவப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) செய்த உறுப்புகளில் உள்ள அடையாளங்களால் கறுப்பு, வெள்ளை கலந்த (பஞ்ச கல்யாணிக்) குதிரைகள் போன்று பிரகாசமாக அவர்கள் இருப்பார்கள். (அதை வைத்து அவர்களை அறிந்து கொள்வேன்)” என விடையளித்தார்கள்.