حَجَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَحْلٍ، رَثٍّ، وَقَطِيفَةٍ تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ، أَوْ لَا تُسَاوِي، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ حَجَّةٌ لَا رِيَاءَ فِيهَا، وَلَا سُمْعَةَ»
பாடம்:
வாகனத்தில் ஹஜ் செய்வது.
2890. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பழைய சேணம் போடப்பட்ட வாகனத்தில் ஹஜ் செய்தார்கள். அவ்வாகனத்தின் மீது உள்ள போர்வை நான்கு திர்ஹத்தின் மதிப்பு கூட கிடையாது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இந்த ஹஜ்ஜை அடுத்தவர் பார்ப்பதற்காகவும், துதிப்பதற்காகவும் இல்லாமல் (தூய்மையாக) ஆக்கு! என்று துஆச் செய்தார்கள்.