«سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ» ، قِيلَ: وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ»
4036. “(ஒரு காலத்தில்) மக்களை ஏமாற்றும் சில வருடங்கள் வரும். அப்போது பொய்யர், உண்மையாளராக கருதப்படுவார்; உண்மையாளர், பொய்யராக கருதப்படுவார். மோசடிக்காரர், நம்பிக்கையாளராக கருதப்படுவார்; நம்பிக்கையாளர், மோசடிக்காரராக கருதப்படுவார். அப்போது (மக்கள் விசயம் பற்றி) ருவைபிளாவும் பேசுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “ருவைபிளா” என்றால் யார்? என வினவப்பட்டது. அதற்கவர்கள், “மக்கள் நிலைப் பற்றி சரியாக அறியாத மனிதன் (குறைமதியாளன் அவர்களின் விசயம் பற்றி பேசுவான்”) என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)