🔗

இப்னுமாஜா: 4252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلْتُ مَعَ أَبِي عَلَى عَبْدِ اللَّهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النَّدَمُ تَوْبَةٌ» ، فَقَالَ لَهُ أَبِي: أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «النَّدَمُ تَوْبَةٌ» ، قَالَ: نَعَمْ


4252. அப்துல்லாஹ் பின் மஃகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் எனது தந்தை (மஃகில் பின் முகர்ரின்-ரலி) யுடன் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், (ஒருவர் தான் செய்த) பாவத்தை நினைத்து வருந்துவதே பாவமன்னிப்புத் தேடுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.

அதற்கு என் தந்தை, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்களே நேரடியாக செவியேற்றீர்களே? என்று கேட்டார். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.