🔗

இப்னுமாஜா: 4257

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى، يَقُولُ: يَا عِبَادِي كُلُّكُمْ مُذْنِبٌ، إِلَّا مَنْ عَافَيْتُ، فَسَلُونِي الْمَغْفِرَةَ فَأَغْفِرَ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ، فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي غَفَرْتُ لَهُ، وَكُلُّكُمْ ضَالٌّ، إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ، إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ، وَمَيِّتَكُمْ، وَأَوَّلَكُمْ، وَآخِرَكُمْ، وَرَطْبَكُمْ، وَيَابِسَكُمُ اجْتَمَعُوا، فَكَانُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي، لَمْ يَزِدْ فِي مُلْكِي جَنَاحُ بَعُوضَةٍ، وَلَوِ اجْتَمَعُوا فَكَانُوا عَلَى قَلْبِ أَشْقَى عَبْدٍ مِنْ عِبَادِي، لَمْ يَنْقُصْ مِنْ مُلْكِي جَنَاحُ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ، وَمَيِّتَكُمْ، وَأَوَّلَكُمْ، وَآخِرَكُمْ، وَرَطْبَكُمْ، وَيَابِسَكُمُ اجْتَمَعُوا، فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، مَا نَقَصَ مِنْ مُلْكِي، إِلَّا كَمَا لَوْ أَنَّ أَحَدَكُمْ مَرَّ بِشَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ فِيهَا إِبْرَةً، ثُمَّ نَزَعَهَا، ذَلِكَ بِأَنِّي جَوَادٌ مَاجِدٌ، عَطَائِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا، فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “


4257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘என் அடியார்களே! நான் மன்னிப்பு வழங்கியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் பாவிகள். எனவே, என்னிடம் மன்னிப்பு கோருங்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன். உங்களில் எவர், நான் மன்னிப்பு வழங்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்பதை அறிந்து, எனது ஆற்றலைக் கொண்டு என்னிடம் மன்னிப்பு கோருகிறாரோ, அவரை நான் மன்னிக்கிறேன்.

நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழிகெட்டவர்களே. எனவே, என்னிடம் நேர்வழியைக் கேளுங்கள்; உங்களுக்கு நான் நேர்வழி காட்டுகிறேன். நான் செல்வந்தனாக்கியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் ஏழைகளே. எனவே, என்னிடம் கேளுங்கள்; உங்களுக்கு நான் உணவளிக்கிறேன்.

உங்களில் உயிருள்ளவர்கள், இறந்தவர்கள், முந்தையவர்கள், பிந்தையவர்கள், ஈரமானவர்கள் மற்றும் காய்ந்தவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, என் அடியார்களில் மிகத் தூய்மையான ஒருவரின் இதயத்தைப் போன்ற குணத்தவர்களாக மாறிவிட்டாலும், அது எனது ஆட்சியில் ஒரு கொசுவின் சிறகளவு கூட அதிகரிக்காது. அதேபோல், அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, என் அடியார்களில் மிகக் கெட்ட ஒருவரின் இதயத்தைப் போன்ற குணத்தவர்களாக மாறிவிட்டாலும், அது எனது ஆட்சியில் ஒரு கொசுவின் சிறகளவு கூட குறைக்காது.

மேலும், உங்களில் உயிருள்ளவர்கள், இறந்தவர்கள், முந்தையவர்கள், பிந்தையவர்கள், ஈரமானவர்கள் மற்றும் காய்ந்தவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை என்னிடம் கேட்டு, அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டாலும், அது எனது ஆட்சியில், உங்களில் ஒருவர் கடலோரமாகச் சென்று ஒரு ஊசியை நீரில் நனைத்து எடுத்தால், அந்த ஊசியின் முனை கடலில் எவ்வளவு நீரை எடுத்துச் செல்லுமோ அவ்வளவு அளவை மட்டுமே குறைக்கும்.

இதற்குக் காரணம், நான் ஜவாத்-பேரருளாளன்; மாஜித்-கண்ணியமிக்கவன். எனது கொடை வெறும் சொல்லே ஆகும். நான் ஏதேனும் ஒன்றை நாடினால், ‘ஆகு’ என்று கூறுகிறேன்; அது உடனே ஆகிவிடுகிறது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)