كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» ، قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا، أُولَئِكَ الْأَكْيَاسُ»
4259. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். பின்பு அவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைநம்பிக்கை கொண்டோரில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நற்குணம் உடையவரே மிகச் சிறந்தவர்” என்று பதில் கூறினார்கள்.
பிறகு அவர், “இறைநம்பிக்கை கொண்டோரில் மிகவும் புத்திசாலி யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் மரணத்தை அதிகம் நினைத்து, அதற்கு பின்னுள்ள (மறுமை) வாழ்விற்காக அழகிய முறையில் முன்னேற்பாடு செய்துக் கொண்டவரே அவர்களில் மிகவும் புத்திசாலி ஆவார்” என்று பதில் கூறினார்கள்.