«لَا يَؤُمُّ عَبْدٌ فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»
பாடம் : 31
(மக்களுக்கு) தலைமை தாங்கித் தொழுவிப்பவர் தமக்காக மட்டுமே பிரார்த்தனை செய்யக் கூடாது.
923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இறையடியார் ஒருவர், (பிரார்த்திக்கும் போது) அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்காமல் தமக்கு மட்டுமே பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால் அவர் மக்களுக்கு துரோகமிழைத்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஸவ்வான் (ரலி)