🔗

பைஹகீ-குப்ரா: 10310

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنْ قَالَ: بِاسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ , لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ يُقَالُ: وُقِيتَ وَكُفِيتَ


10310. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால்…, நான் அவனையே சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “நீ பாதுகாக்கப்பட்டாய்! பொறுப்பேற்கப்பட்டாய்! என்று அவருக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் “ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.