🔗

பைஹகீ-குப்ரா: 11912

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

اجْتَمَعَ مَالِكٌ وَأَبُو يُوسُفَ عِنْدَ أَمِيرِ الْمُؤْمِنِينَ فَتَكَلَّمَا فِي الْوُقُوفِ وَمَا يَحْبِسُهُ النَّاسُ، فَقَالَ يَعْقُوبُ: هَذَا بَاطِلٌ، قَالَ شُرَيْحٌ: جَاءَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِطْلَاقِ الْحَبْسِ، فَقَالَ مَالِكٌ: إِنَّمَا جَاءَ مُحَمَّدٌ صَلَّى الله عَلَيْهِ وآله وَسَلَّمَ بِإِطْلَاقِ مَا كَانُوا يَحْبِسُونَهُ لِآلِهَتِهِمْ مِنَ الْبَحِيرَةِ وَالسَّائِبَةِ، فَأَمَّا الْوُقُوفُ فَهَذَا وَقْفُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ حَيْثُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا ” وَهَذَا وَقْفُ الزُّبَيْرِ. فَأَعْجَبَ الْخَلِيفَةَ ذَلِكَ مِنْهُ، وَبَقِيَ يَعْقُوبُ


11912. ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை, அமீருல் முஃமினீன்- அவர்களின் அவையில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும், அபூயூஸுஃப் (ரஹ்) அவர்களும் வக்ஃப் சொத்துகள் மற்றும் மக்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் பொருட்கள் பற்றி விவாதித்தனர்.

அப்போது அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள், “வக்ஃப் செய்வது தவறானது” என்று அழுத்தமாக கூறினார். மேலும் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தடுத்து வைப்பதை நீக்கும் சட்டத்துடன் வந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக விலங்குகளைத் தடுத்து வைத்திருந்த ‘பஹீரா’, ‘சாயிபா’ போன்றவற்றை நீக்கும் சட்டத்துடன்தான் வந்தார்கள். ஆனால், வக்ஃப் என்பது வேறு. இது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வக்ஃப் ஆகும். நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அனுமதி கேட்டபோது, “அஸல் பொருளை உன்வசம் வைத்துக் கொண்டு, அதன் பலனைப் பொதுவாக விட்டுவிடுவீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். மேலும், ஜுபைர் (ரலி) அவர்களின் வக்ஃபும் இதற்கு ஆதாரம்” என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் (இந்த வலுவான மற்றும் தெளிவான)  விளக்கத்தைக் கேட்ட கலீஃபா பெரிதும் ஆச்சரியப்பட்டார். அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் (இதை மறுத்துப் பேச எதுவும் இல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அப்துல்லாஹ்..