أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” خَطَبَ عَائِشَةَ إِلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَا أَنَا أَخُوكَ؟ فَقَالَ: ” إِنَّكَ أَخِي فِي دِينِ اللهِ وَكِتَابِهِ، وَهِيَ لِي حَلَالٌ “،
13916. உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும், வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்” என்று கூறினார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை, புகாரீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய ‘ஸஹீஹ் புகாரியில்’ அப்துல்லாஹ் பின் யூஸுஃப் —> லைஸ் (ரஹ்) … என்ற அறிவிப்பாளர்தொடரில் இவ்வாறே முர்ஸலாக அறிவித்துள்ளார்.