أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَدِمَ الشَّامَ فَوَجَدَهُمْ يَسْجُدُونَ لِبَطَارِقَتِهِمْ وَأَسَاقِفَتِهِمْ فَرَوَى فِي نَفْسِهِ أَنْ يَفْعَلَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَدِمَ سَجَدَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَرَ ذَلِكَ قَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي دَخَلْتُ الشَّامَ فَوَجَدْتُهُمْ يَسْجُدُونَ لِبَطَارِقَتِهِمْ وَأَسَاقِفَتِهِمْ فَرَوَيْتُ فِي نَفْسِي أَنْ أَفْعَلَ ذَلِكَ لَكَ , فَقَالَ رَسُولُ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: ” لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ رَبِّهَا عَزَّ وَجَلَّ حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا كُلَّهُ حَتَّى أَنْ لَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى قَتَبٍ أَعْطَتْهُ ” أَوْ قَالَ: لَمْ تَمْنَعْهُ
14711. முஆத் (ரலி) அவர்கள் ஷாமுக்கு சென்றார்கள். அங்குள்ளவர்கள் தமது தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களும் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சிரம் பணிய வேண்டும் என தமக்குள் கூறிக்கொண்டார்கள். முஆத் (ரலி) அவர்கள் ஷாமிலிருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு சிரம் பணிந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.
முஆத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஷாமில் உள்ளவர்கள் தமது தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சிரம் பணிவதை பார்த்தேன். எனவே நான் உங்களுக்கு சிரம் பணியவேண்டும் என்று விரும்பினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்….
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)