كَانَ بِالْمَدِينَةِ امْرَأَةٌ يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ تَخْفِضُ الْجَوَارِي، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أُمَّ عَطِيَّةَ اخْفِضِي وَلَا تَنْهِكِي , فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ , وَأَحْظَى عِنْدَ الزَّوَاجِ
17561. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அதிய்யாவே! மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; (அவளின்) திருமண வாழ்க்கைக்கும் நல்லது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
அபூஸகரிய்யா-இப்னுமயீன் அவர்கள், இதில் இடம்பெறும் ளஹ்ஹாக் பின் கைஸ் என்பவர் (நபித்தோழரான) ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ என்பவர் அல்ல என்று கூறியதாக ஃகலாபீ அவர்கள் கூறினார்.