🔗

பைஹகீ-குப்ரா: 6396

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا إِلَّا امْرَأً بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ ” قَالَ: ” فَيُقَالُ: انْتَظِرْ هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَارِمٍ الْحَافِظُ بِالْكُوفَةِ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، فَذَكَرَهُ بِمَعْنَاهُ إِلَّا أَنَّهُ قَالَ: ” انْظُرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا مَرَّتَيْنِ


6396. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள் என்று (வானவர்களுக்கு) கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் “இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்பதை இரண்டுதடவைகள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.