🔗

பைஹகீ-குப்ரா: 6724

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

سَأَلْتُ ابْنَ عُمَرَ وَهُوَ فِي أَصْلِ الْأَرَاكِ يَوْمَ عَرَفَةَ، وَهُوَ يَنْضَحُ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَوَجْهِهِ، فَقُلْتُ لَهُ: يَرْحَمُكَ اللهُ، حَدِّثْنِي عَنِ الْكَبَائِرِ، فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللهِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ ” فَقُلْتُ: أَقَتْلُ الدَّمِ؟ قَالَ: ” نَعَمْ، وَرَغْمًا، وَقَتْلُ النَّفْسِ الْمُؤْمِنَةِ، وَالْفِرَارُ يَوْمَ الزَّحْفِ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ، وَإِلْحَادٌّ بِالْبَيْتِ الْحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءً وَأَمْوَاتًا “


6724. தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், அரஃபா நாளில் ஒரு அராக் மரத்தின் கீழ் இருந்துக் கொண்டு தனது தலையிலும் முகத்திலும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! பெரும்பாவங்கள் எவை? என்று தெரிவியுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கவர்கள், (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
2 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவது,
3 . நம்பிக்கைக் கொண்ட உயிரை நியாயமின்றி கொலைசெய்வது,
4 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பது,
6 . முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை தருவது,
7 . உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை கெடுப்பது ஆகியவைகளாகும்.