أَنَّ أَبَا الدَّرْدَاءِ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى سَلْمَانَ: أَنَّ رَجُلًا شَكَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنْ أَرَدْتَ أَنْ يُلَيَّنَ قَلْبُكَ فَامْسَحْ رَأْسَ الْيَتِيمِ وَأَطْعِمْهُ
7095. முஹம்மது பின் வாஸிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுத்தர்தா (ரலி) அவர்கள், ஸல்மான் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய உள்ளத்தில் முரட்டுத்தன்மை இருப்பதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் உன் உள்ளம் இளகிய மனம் உள்ளதாக ஆவதை நீ விரும்பினால் அனாதையின் தலையை தடவிக்கொடுப்பீராக. அனாதைக்கு உணவளிப்பீராக! என்று கூறினார்கள்.