” ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللهَ وَحْدَهُ فَإِنَّهُ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ فِي كُلِّ عَامٍ , وَلَمْ يُعْطِ الْهَرِمَةَ وَلَا الدَّرِنَةَ وَلَا الشَّرَطَ اللَّائِمَةَ وَلَا الْمَرِيضَةَ وَلَكِنْ مِنَ أَوْسَطِ أَمْوَالِكُمْ , فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ , وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ , وَزَكَّى عَبْدٌ نَفْسَهُ ” فَقَالَ رَجُلٌ: مَا تَزْكِيَةُ الْمَرْءِ نَفْسَهُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: ” يَعْلَمُ أَنَّ اللهَ مَعَهُ حَيْثُ مَا كَانَ “. وَقَالَ غَيْرُهُ: ” وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ “
7275.
…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார்.
1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்.
2 . ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3 . கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல்.
அல்லாஹ் உங்களிடம் (அவைகளில்) நல்லவற்றையே கேட்கிறான். கெட்டவற்றை (தருமாறு) அவன் கட்டளையிடவில்லை.
(தர்மம் செய்வதால் அடியான்) தன் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், உள்ளத்தை தூய்மைப்படுத்திக்கொள்வது என்றால் என்ன? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு அடியார், நாம் எங்கிருந்தாலும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று உறுதியாக அறிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ?