أُهْدِيَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فَقَالَ: «اقْسِمِيهَا»
قَالَ: وَكَانَتْ عَائِشَةُ إِذَا رَجَعَتِ الْخَادِمَ قَالَتْ: مَا قَالُوا لَكِ؟ تَقُولُ مَا يَقُولُونَ يَقُولُ: بَارَكَ اللهُ فِيكُمْ فَتَقُولُ عَائِشَةُ: وَفِيهِمْ بَارَكَ اللهُ، تَرُدُّ عَلَيْهِمْ مِثْلَ مَا قَالُوا وَيَبْقَى أَجْرُنَا لَنَا
பாடம்:
அன்பளிப்பு வழங்கியவருக்கு என்ன கூறவேண்டும்?
10062. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எனவே அவர்கள் (அதை சிலருக்கு) பங்கிட்டு வழங்குமாறு என்னிடம் கூறினார்கள்.
உபைத் பின் அபுல்ஜஃத் (ரஹ்) கூறுகிறார்:
(அன்பளிப்பைக் கொண்டுச் சென்று பிறருக்கு வழங்கிவிட்டு வரும்) பணியாளரிடம் அவர்கள் என்ன கூறினார்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்பார்கள். அதற்கு பணியாளர் அவர்கள், “பாரகல்லாஹு ஃபீகும்” (அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் அளிப்பானாக!) என்று கூறியதாகச் சொல்வார். ஆயிஷா (ரலி) அவர்கள், “வ ஃபீஹிம் பாரகல்லாஹு” (அல்லாஹ் அவர்களுக்கும் அருள்வளம் அளிப்பானாக!) என்று கூறிவிட்டு; “நாம் அவர்கள் கூறியதைப் போன்று (பதில் பிரார்த்தனையை) கூறுவோம். (அன்பளிப்புக்கான) நம்முடைய கூலி நமக்கே இருக்கும்” என்று கூறுவார்கள்.