🔗

குப்ரா-நஸாயி: 10324

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَرَّ بِنَا رَجُلٌ طُوَالٌ أَشْعَثُ، فَقِيلَ: إِنَّ هَذَا خَدَمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُمْتُ إِلَيْهِ فَقُلْتُ: أَخَدَمْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: حَدِّثْنِي عَنْهُ حَدِيثًا لَمْ تَدَاوَلْهُ الرِّجَالُ بَيْنَكَ وَبَيْنَهُ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: «رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ»


10324. அபூஸல்லாம்-மம்தூர் அல்அஸ்வத் அவர்கள் கூறியதாவது:

எங்களை நெட்டையான, பரட்டைத்தலை நிலையில் உள்ள ஒரு மனிதர் கடந்து சென்றார். அப்போது “(இதோ) இவர் தான் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்தவர் என்று கூறப்பட்டது. உடனே நான் எழுந்து சென்று அவரிடம், “நீங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்துள்ளீரா? என்று கேட்டேன். அதற்கவர், “ஆம்” என்று பதிலளித்தார். எனவே நான், “உங்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் வேறு அறிவிப்பாளர் இல்லாமல் நீங்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு தடவை) சென்றபோது “ஒரு முஸ்லிமான அடியார் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என மூன்றுத் தடவைக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என்று அறிவித்தார்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)