🔗

குப்ரா-நஸாயி: 6738

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ لُقْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ لِلنَّفَسِ»


6738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும்.

(உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)