🔗

குப்ரா-நஸாயி: 8771

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَا كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ، وَلَكِنْ كَانَ إِذَا سَأَلَ عَنِ اسْمِ الرَّجُلِ فَكَانَ حَسَنًا رُئِيَ الْبِشَارَةُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ سَيِّئًا رُئِيَ ذَلِكَ فِيهِ، وَإِذَا سَأَلَ عَنِ اسْمِ الْأَرْضِ فَكَانَ حَسَنًا رُئِيَ الْبِشَارَةُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ سَيِّئًا رُئِيَ ذَلِكَ فِيهِ»


8771. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. ஒரு மனிதரின் பெயரைப் பற்றிக் கேட்டு, அவருடையப் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயர் கெட்டதாக இருந்தால் அதனால் அவர்களது முகத்தில் வெறுப்பு தென்படும். 

அவர்கள் ஒரு ஊரின் பெயரைப் பற்றி விசாரித்து அதன் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் கெட்டதாக இருந்தால் அதனால் அவர்களது முகத்தில் வெறுப்பு தென்படும்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)