🔗

குப்ரா-நஸாயி: 9747

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ حِمْصَ، فَمَرَّ رَجُلٌ فَقُمْتُ إِلَيْهِ، فَقُلْتُ: حَدِّثْنِي حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ تَدَاوَلَهُ الرِّجَالُ بَيْنَكَ وَبَيْنَهُ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: ” مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَقُولُ حِينَ يُصْبِحُ ثَلَاثًا، وَحِينَ يُمْسِي: رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ


9747. அபூஸல்லாம்-மம்தூர் அல்அஸ்வத் அவர்கள் கூறியதாவது:

நான் ஹிம்ஸ் நகர பள்ளிவாசலில் இருக்கும் போது ஒரு மனிதர் பள்ளியைக் கடந்து சென்றார். உடனே நான் எழுந்து சென்று அவரிடம், “உங்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் வேறு அறிவிப்பாளர் இல்லாமல் நீங்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு தடவை) சென்றபோது “ஒரு முஸ்லிமான அடியார் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபிய்யா” என மூன்றுத் தடவைக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)