🔗

musannaf-abdur-razzaq-14941: 14941

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

كُنَّا عِنْدَهُ وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ، فَتَمَخَّطَ ثُمَّ مَسَحَ أَنْفَهُ بِثَوبِهِ قَالَ: «الْحَمْدُ للَّهِ يَمْتَخِطُ أَبُو هُرَيْرَةَ فِي الْكِتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَيَّ مِنَ الْجُوعِ، فَيَجِيءُ الرَّجُلُ فَيَقْعُدُ عَلَى صَدْرِي، فَأَقُولُ لَيْسَ بِي ذَلِكَ إِنَّمَا هُوَ مِنَ الْجُوعِ» قَالَ: وَقَالَ: ” إِنِّي كُنْتُ أَجِيرًا لِابْنِ عَفَّانَ، وَابْنَةِ غَزْوَانَ عَلَى عُقْبَةِ رِجْلِي وَشَبَعِ بَطْنِي – أَوْ قَالَ: بِطَعَامِ بَطْنِي – أَخْدِمُهُمْ إِذَا نَزَلُوا، وَأَسُوقُ بِهِمْ إِذَا ارْتَحَلُوا ” قَالَ: ” فَقَالَتْ يَوْمًا: لَتَرْكَبَنَّهُ قَائِمًا، وَلَتَرِدَنَّهُ حَافِيًا قَالَ: فَزَوَّجَنِيهَا اللَّهُ تَعَالَى، فَقُلْتُ: لَتَرِدِنَّهُ حَافِيَةً، وَلَتَرْكَبِنَّهُ وَهُوَ قَائِمٌ ” قَالَ: وَكَانَتْ فِيهِ مُزَاحَةٌ، يَعْنِي أَبَا هُرَيْرَةَ


14941. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள்.

அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்-அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறார்! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து என் மார்பின் மீது அமர்வார். (அவர் என்னை ஒரு வியாதி பிடித்தவர் என்று நினைத்து சிகிச்சையளிப்பார்). நான் அவரிடம், ‘அது வியாதியால் அல்ல, பசியால் ஏற்பட்டதுதான்’ என்று கூறுவேன். (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.

மேலும் அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்:

நான் ஒரு காலத்தில் இப்னு அஃப்ஃபான், கஸ்வானின் மகள் ஆகியோரிடம் கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்கள் பயணத்தைத் தொடங்கும் போது, அவர்களின் வண்டியை ஓட்டிச்செல்வேன். அப்போது அந்தப் பெண் (ஃகஸ்வானின் மகள்), என்னிடம், “நீ நின்றவாறு வண்டியை ஓட்ட வேண்டும். காலணி இல்லாமல் வரவேண்டும்” என்று திமிராகக் கூறினாள். அல்லாஹ்வின் அருளால், நான் அந்தப் பெண்ணையே திருமணம் செய்தேன். திருமணம் ஆன பிறகு நான் அவளிடம், “நீதான் காலணி இல்லாமல் வரவேண்டும். வண்டி நிற்கும் போது நீதான் அதை ஓட்டவேண்டும்” என்று பதிலுக்குச் சொன்னேன்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், நகைச்சுவை உணர்வு மிக்கவர். (இந்தச் சம்பவத்தை அவர் நகைச்சுவையுடன் நினைவுகூர்ந்தார்).