أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ: ادْنُ يَا بُنَيَّ، فَكُلْ بِيَمِينِكَ، وَسَمِّ اللهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ.
20450. வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (அவர்களின் வளர்ப்பு மகன்) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களுக்கு (அவர் சிறுவராக இருந்த போது) அருமை மகனே! அருகில் வா. அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள்.